கைவினை பொருட்களை வாங்கி உள்ளூர் கலைஞர்களை மக்கள் ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சார்பாக கைவினை, உணவு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்டவை இணைந்த கண்காட்சி கடந்த பிப்ரவரி 11ம் தேதி புதுச்சேரி பழைய துறைமுகத்தில் துவங்கியது. இதன் நிறைவு விழா நேற்று (பிப்ரவரி 22) மாலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமை வகித்தார். முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலை வகித்தார்.
இந்நிலையில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது: நாட்டில் வெவ்வேறு மொழிகள் பேசினாலும் இந்திய மக்களோடு சிந்தனைகள் அனைத்தும் ஒன்றே என்று மகாகவி பாரதி பாடியதை இக்கண்காட்சி நமக்கு உணர்த்துகிறது. பிரதமர் மோடி ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் வாயிலாக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற வகையில் இந்திய தயாரிப்பு பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதே சமயம் பத்மஸ்ரீ விருது பெற்ற சிறப் கலைஞர் முனுசாமி போன்றவர்கள் நமது புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பிரதமர் வருகையின்போது சுடுகளிமண் சிறபத்தை பரிசாக வழங்கினோம். மேலும், உள்ளூர் கலைஞர்களை ஊக்கப்படுத்தினால் அதன் வாயிலாக நாட்டின் பொருளாதாரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Daily Thanthi