சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம்: பிரத்தியேக கைத்தறி பொருட்களின் கண்காட்சி!

தமிழ்நாடு மற்றும் குஜராத்தின் பிரத்தியேக கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி.

Update: 2023-04-20 01:04 GMT

மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் சார்பாக தமிழ் நாடு மற்றும் குஜராத் மாநிலங்களின் பிரத்தியேக கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி சோம்நாத் மற்றும் துவாரகாவில் நடைபெறுகிறது. ஜவுளித் துறையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக ஏப்ரல் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் ராஜ்கோட்டில் ஜவுளித் தொழில்துறையின் பங்குதாரர்களுடன் சிந்தனை முகாம் ஒன்றையும் அமைச்சகம் நடத்துகிறது. ஜவுளி அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்களின் ஆதரவுடன் மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசின் ஒருங்கிணைப்போடு நடைபெறும் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


தமிழகத்தின் 47 நகரங்களில் வசிக்கும் 13 லட்சம் சௌராஷ்டிர மக்கள், குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். 400 ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்புற படையெடுப்புகளின் காரணமாக சௌராஷ்டிர மக்கள், தமிழ் நாட்டின் மதுரை மற்றும் இதர நகரங்களுக்கு பெருமளவில் குடி பெயர்ந்ததாக வரலாறு கூறுகிறது. சௌராஷ்ட்ரா மற்றும் தமிழ்நாடு இடையே உள்ள பழமையான உறவு மற்றும் கலாச்சார இணைப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு 2023, ஏப்ரல் மாதத்தில் சோம்நாத், துவாரகா மற்றும் ஒற்றுமை சிலை அருகே பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதே சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமத்தின் நோக்கமாகும். இந்திய அரசின் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற முன்முயற்சியின் கீழ் நடைபெறும் தொடர் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.


“ஒட்டுமொத்த நாட்டின் கூட்டு முயற்சிகள் மற்றும் ஒற்றுமையால் அமிர்த காலத்தில் நமது உறுதிப்பாடுகளை அடைய முடியும்” என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு வாரணாசியில் உரையாற்றிய காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நீட்சியாக சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் சௌராஷ்ட்ரா சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தை இந்த நிகழ்ச்சி ஊக்குவிக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News