பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிப்பு!

Update: 2022-06-24 06:09 GMT

புதுச்சேரி மாநிலம், பாகூர் மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேலாளர் ரவி மேற்பார்வையில் ஊழியர்கள் ஒட்டு மொத்த மார்க்கெட் பகுதியிலும் அதிரடியான சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். உடனடியாக அதனை பறிமுதல் செய்த ஊழியர்கள் கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலமாகவும் தண்ணீர் எடுக்கப்படுதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News