மீன்பிடி தடைக்காலம்: காரைக்காலில் 11,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

Update: 2022-04-15 12:55 GMT

வருடம்தோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நடைபெறும். அதன்படி இன்று காலை (ஏப்ரல் 15) முதல் தொடங்கியதை முன்னிட்டு காரைக்காலில் சுமார் 11,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மீன்களின் இனப்பெருக்கம் காலம் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை ஆகும். இந்த காலத்தில் மீன்களை பிடித்தால் மீன்களின் வயிற்றில் உள்ள சினை முட்டை அழிக்கப்பட்டு மீன்களின் இனப்பெருக்கமே பாதிப்புக்கு உள்ளாகிவிடும். இதனை அறிந்துதான் மத்திய, மாநில அரசு இந்த காலக்கட்டத்தில் 61 நாட்கள் ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று காரைக்காலில் உள்ள 11,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Source: Maalaimalar

Image Courtesy: The New Indian Express

Tags:    

Similar News