புதுச்சேரியில் கடற்கரை திருவிழா நடத்தப்படும்!

Update: 2022-03-05 04:38 GMT

தமிழ் புத்தாண்டு முதல் கடற்கரை திருவிழா நடத்தப்படும் என்று புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் சிறந்த கட்டிடக்கலையின் பாரம்பரியத்தை பாதுகாத்திடவும், அழகிய கடற்கரை நீர்நிலைகள், குளங்கள், வளமான ஆன்மிக தலங்களின் அறிவுசார்ந்த வரலாற்று பெருமைகளை விரிவுபடுத்துகின்ற நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் புதுச்சேரி பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான தொடக்க விழா நேற்று (மார்ச் 4) மாலை அலையன்ஸ் பிரான்சிஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்து பேசியதாவது: புதுச்சேரியை பொருத்தவரையில் கட்டிடங்களுக்கு என்று தனி மதிப்பு உண்டு. இது அரசாங்கத்துக்கு தெரியும். எனவே பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதே சமயம் கடற்கரையும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ப்ளூ பிளாக் பீச் பட்டியலில் சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை இடம் பெற்றுள்ளது. இதனை வலுப்படுத்த கடற்கரை திருவிழா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த திருவிழா நடைபெறும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News