G20 சர்வதேச தொழில் பூங்கா... புதுச்சேரியில் அமைய இருக்கிறதா..

Update: 2023-09-29 05:21 GMT

புதுச்சேரியில் G20 சர்வதேச தொழில் பூங்கா அமைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதுச்சேரியில் G20 சர்வதேச தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் G20 சர்வதேச தொழில் பூங்கா அமைப்பதற்கு தேவைப்படும் நிலம் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். இது தொடர்பாக முதலமைச்சர் தலைமையிலான கூட்டம் நேற்று நடைபெற்றது.


புதுச்சேரியில் G20 சர்வதேச தொழில் பூங்கா அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள IIT இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் மற்றும் பலர் ஆகியோரின் தலைமையில் இந்த ஒரு கூட்டம் நடைபெற்றது.


தொடர்ந்து, அடுத்த மாதம் முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. வாளாகத்தை ஆய்வு செய்ய நேரில் பயணம் செய்யும் என்றும், புதுச்சேரியில் G20 சர்வதேச தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News