G20 மாநாடு புதுச்சேரியில் தொடங்கியது - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்!
ஜி-20 மாநாட்டில் ஒரு பகுதி புதுச்சேரியில் தொடங்கியது.
நேற்று காணும் பொங்கல் நிகழ்ச்சியின் போது புதுச்சேரி கவர்னர் மாளிகையில் ஆரோராவின் வளர்ச்சி குழு கூட்டம் மற்றும் அரவிந்தரின் 150ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கவர்னர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் ஆரோவில் அமைப்பின் செயலர் ஜெயந்தி ரவி, நிர்வாகிகள் மற்றும் அரவிந்தர் ஆசிரம அதிகாரிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆரோவில் வளர்ச்சித் திட்டம் தொடர்பான காணொளி காட்சி திரையிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகள் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், அவர்கள் கனவுகள் நிறைவேற்றும் நாட்டின் 75வது சுதந்திர ஆண்டின் கொண்டாடும் இந்த வேளையில் இந்தியா தற்போது G20 தலைமை பொறுப்பை ஏற்று இருக்கிறது என்று குறிப்பிட்டார். அவர்களுடைய கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டியது அவசியம். அப்போது தான் இந்தியா முன்னேறும். G20 மாநாட்டின் ஒரு பகுதி புதுச்சேரியில் நடக்க இருக்கிறது. பொருளாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவை விவாதிக்கப்பட இருக்கிறது.
மேலும் இந்தியாவின் G20 தலைமை பொறுப்பிற்கு வருகை தர இருக்கும் பலர் வெளிநாட்டினருக்கு நம்முடைய நாட்டின் கலாச்சாரம், தொன்மை, உணவு முறை பற்றி தெரிவிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் பங்களிப்பு காட்ட இளைஞர்கள் பார்வை எப்படி இருக்கிறது? இளைஞர்கள் எப்படி தற்பொழுது தங்களுடைய பார்வை மாற்றி இருக்கிறார்கள் என்று போன்று அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை தர வேண்டும் என்று கூறினார்.
Input & Image courtesy: News