புதுச்சேரி: பட்டப்பகலில் துலுக்கானத்தம்மன் கோயில் சிலைகள் உடைப்பு: கொந்தளிக்கும் பக்தர்கள்!

புதுச்சேரி, பாரதி வீதி துலுக்கானத்தம்மன் கோயிலில் சாமி சிலைகளை மர்ம நபர்கள் பட்டப்பகலில் உடைத்துவிட்டு சென்றிருப்பது பக்தர்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-16 02:55 GMT

புதுச்சேரி, பாரதி வீதி துலுக்கானத்தம்மன் கோயிலில் சாமி சிலைகளை மர்ம நபர்கள் பட்டப்பகலில் உடைத்துவிட்டு சென்றிருப்பது பக்தர்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பாரதி வீதியில் துலுக்கானத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவதால் பல்வேறு ஊர்களில் இருந்து இந்த கோயிலுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். அதன்படி நேற்று (நவம்பர் 15) காலையில் பூஜையை முடித்துக்கொண்டு மத்தியம் கோயில் நடையை சாத்திவிட்டு பூசாரி சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மாலை பூஜைக்காக கோயில் திறக்க வந்தபோது, கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது துர்க்கையம்மன், விநாயகர், முருகர் ஆகிய சாமி சிலைகள் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளதை பார்த்து மனம் நொந்துள்ளார் பூசாமி.

இது தொடர்பாக பூசாரி அய்யனார் கோயில் அறங்காவல் குழுவுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் முத்தியால்பேட்டை போலீசாருக்கு நடந்த சம்பவம் பற்றி புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் பெருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

விரைவில் குற்றவாளிகள் பிடிப்படுவார்கள் என போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அப்பகுதியில் திரண்ட பக்தர்கள் கலைந்து சென்றனர். பட்டப்பகலில் கோயிலில் இருந்த சாமி சிலைகளை உடைத்துவிட்டு சென்ற சம்பவம் புதுச்சேரி முழுவதும் காட்டுத்தீ போன்று பரவியுள்ளது. தமிழகத்தில் சாமி சிலைகளை தொடர்ந்து உடைத்த நிலையில் தற்போது புதுச்சேரி பகுதியிலும் சாமி சிலைகளை உடைக்கப்பட்டு வருவது இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi



Tags:    

Similar News