அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !!! இன்னும் 2 மாதங்களில் பதவி உயர்வு !!!

Breaking News.

Update: 2021-09-12 04:53 GMT

புதுச்சேரி காவல் துறை ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர்கள் 431 பேருக்கு ஏட்டு (ஸ்பெஷல் கிரேடு) பதவி உயர்வு வழங்கும் விழா கோரிமேடு காவலர் மைதானத்தில் நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

புதுவை காவல்துறை பொதுமக்களுக்கு சிறப்பான பாதுகாப்பை அளித்து வருகிறது. மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப காவல்துறையில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்படுவார்கள். காவல்துறையை பலப்படுத்த அரசு அதிக நிதி ஒதுக்கி உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும். அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப அரசு முழுமுயற்சி மேற்கொண்டு வருகிறது. 

கொரோனா பரவலின்போது போலீசார் சிறந்த முறையில் பணியாற்றினார்கள். அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன். புதுவை அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணி நிரந்தரம் 2 மாதங்களில் வழங்கப்படும்"

இவ்வாறு புதுச்சேரி முதல்வர் பேசினார்.

Image : News Minute

Tags:    

Similar News