தடுப்பூசி போடுபவர்களுக்கு மட்டும் தான் அரசின் நலத்திட்ட உதவிகளா?
புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி போட்டால்தால் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி போட்டால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதே போன்று புதுச்சேரி மாநிலத்திலும் தடுப்பூசி பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், தடுப்பூசி போட்டால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கான நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால்தான் கல்வி நிலையங்களில் சேருவதற்கான நிலை உருவாக வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளார்.
Source: Dinakaran.
Image Courtesy: The Hans india
https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=695512