புதுச்சேரி அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிய வேண்டும்: கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்!
புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிய வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்.
புதுச்சேரியில் மாதத்தில் முதல் நாள் பாரம்பரிய ஆடை தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கிறார். மேலும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் 30 நாட்களில் ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்று தன்னுடைய ஆய்வு கூட்டத்தில் அவர் தெரிவித்து இருக்கிறார். புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் துணைத் தலைவர்களுக்கு தற்பொழுது சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
அந்த அறிக்கையில் இந்த தகவல்கள் அடங்கி இருந்தது. குறிப்பாக மாதத்தின் முதல் நாள் பாரம்பரிய ஆடை தினமாக கடைபிடிக்க வேண்டும். அந்த நாளில் அனைத்து அரசு ஊழியர்களும் பாரம்பரிய கதர் ஆடையை அணிந்து அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக கைத்தறித்தனமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த பெயர் தினம்மாக கூறப்பட்டு இருக்கிறது.
துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அரசுகளுக்கு அரசு துறைகளுக்கு அனுப்பிய மற்றொரு உத்தரவில் மாதம் தோறும் 15 ஆம் தேதி மக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் அனைத்து துறைகளிலும் மனுக்கள் பெற வேண்டும். குறிப்பாக அந்த மனுக்களை தனித்தனியாக விசாரித்து உரிய தீர்வுகளை மக்களுக்கு அளிக்க வேண்டும். 30 நாட்களுக்குள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy:Maalaimalar