அரசு பணத்தில் பல கோடி ஊழல் செய்தவர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

அரசு கல்லூரியில் கழிவறை திட்டத்தில் பல கோடி ஊழல் செய்த என்ஜினீயர் மற்றும் கல்லூரி இயக்குனரை சஸ்பெண்ட் செய்து கவர்னர் அதிரடி உத்தரவு.

Update: 2022-10-15 02:31 GMT

கல்லூரி வளாகத்தில் கழிவறை கட்டிடம் கட்டுவதில் மோசடியில் ஈடுபட்டு அரசு பணத்தை ஊழல் செய்த இளநிலை இன்ஜினியர் மற்றும் கல்லூரி இயக்குனர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் கழிவறை கட்டுவதில் மோசடி செய்ததாக அரசு பணத்தை ஏமாற்றி ஒரு மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் ஊடக வளர்ச்சித் துறை சார்பில் வட்டார வளர்ச்சி முகமை மூலமாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இத்திட்டத்தில் புதுவை ஆரியங்குப்பம் முன்னாள் வட்டார வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தர், காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராமப்புறங்களில் கழிவறைகளை கட்டாமல் அதைக் கட்டியதாக ஊழல் செய்ததாக துறை அமைச்சர் ஜெயிஷ்குமாருக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து துறை விசாரிக்க உத்தரவிட்டார். விவேகானந்தர் காரைக்கால் பொதுப்பணிக்கும், பிரேமா காமராஜர் இன்ஜினியர் கல்லூரிக்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் முடித்து தற்போது அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறது. இதில் கழிவறை கட்டாமல் பயனாளிகள் பெயரை பயன்படுத்தி அரசு பணத்தை மோசடி செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் விவேகானந்தர் மற்றும் அரசு இன்ஜினியர் கல்லூரி இயக்குனர் பிரேமா ஆகியோரை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் சஸ்பெண்ட் செய்து உத்தர விட்டுள்ளார்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News