மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு.. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி.!

Update: 2021-03-15 05:24 GMT

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் பொதுமக்களுக்கு மாசு கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதே போன்று அரசு ஊழியர் குடியிருப்புகள் முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதனை அனைத்தும் புகாராக ஆளுநளுக்கு மக்கள் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கருவடிக்குப்பம், லட்சுமி நகர், அய்யனார் கோயில் வீதிக்கு சென்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்று ஆய்வு செய்தார்.


 



அப்போது பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த ஆளுநர், இதனை உடனடியாக சரி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுங்கள் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதே போன்று மற்ற பகுதிகளிலும் ஆளுநர் சென்று ஆய்வு செய்தார். நேரில் சென்று பொதுமக்களிடம் நேரடியாக கருத்துக்களை கேட்டு வருவதால் தங்களின் குறைகளை மக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த குறைகளை உடனடியாக சரிசெய்யவும் ஆளுநர் உத்தரவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News