தமிழ்த்தாய் வாழ்த்தை மறந்து நிகழ்ச்சி: மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்க வைத்த ஆளுநர் தமிழிசை!

Update: 2022-06-26 13:10 GMT

புதுச்சேரி ஜிப்மரில் நடைபெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததை சுட்டிக்காட்டி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இசைக்க வைத்த நிகழ்வுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜிப்மரில் நேற்று (ஜூன் 25) ரூ.65.6 கோடியில் சர்வதேச பொது சுகாதார பள்ளியை நாட்டுக்கு அர்ப் பணிக்கும் விழா நடைபெற்றது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா நாட்டு அர்ப்பணித்தார். இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே விழா தொடங்கியதும், வழக்கமாக ஜிப்மர் விழாக்களில் பாடப்படும் தன்வந்திரி கீதம் பாடப்பட்டது. ஆனால் வழக்கம் போல் அரசு விழாக்களில் இடம் பெறும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசிவிட்டு அமர்ந்தார்.

இந்நிலையில், மேடையில் மீண்டும் ஆளுநர் தமிழசை பேசும்போது, விழா தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி விழா தொடங்காதது வருத்தம் அளிக்கிறது என்றார். அவர் சுட்டிக்காட்டிய பின்னர் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மறந்துபோன தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் இசைக்க வைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Source,Image Courtesy: Twitter

Tags:    

Similar News