உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரால் பல இந்தியர்களை அங்கிருந்து பாதுகாப்பாக மத்திய அரசு அழைத்து வருகிறது. அதன்படி ஹங்கேரி வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த புதுச்சேரி மாணவி ரோஜா சிவமணியை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; மத்திய அரசின் மிக கடுமையான முயற்சியின் காரணமாக உக்ரைனில் உள்ள நமது நாட்டின் குடிமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மாணவர்களை மிக, மிக பாதுகாப்புடன் மத்திய அரசு அழைத்து வருகிறது.
உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக நாடு திரும்பி சற்று முன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) March 1, 2022
புதுச்சேரியை சேர்ந்த மாணவி செல்வி.ரோஜா சிவமணியை சென்னை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றேன்.@PMOIndia @HMOIndia @MEAIndia @DrSJaishankar @PIB_India @ANI #OperationGanga pic.twitter.com/LS33sr1muS
எனவே இதற்காக இதுவரைக்கும் 25க்கும் மேற்பட்ட விமானங்களை மத்திய அரசாங்கம் இயக்கி வருகிறது. அது மட்டுமின்றி 4 மத்திய அமைச்சர்கள் களத்தில் உள்ளனர். ஆபரேஷன் கங்கா மிகவும் மன நிம்மதியை கொடுத்துள்ளது. அதன்படி புதுச்சேரி மாணவி ரோஜா மீட்கப்பட்டு சென்னை வந்துள்ளார். இன்னும் சில மாணவர்கள் மீட்கப்பட உள்ளது. இந்த தருணத்தில் பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Twiter