தூய்மையான, பசுமையான இந்தியாவை விரைவில் உருவாக்க முடியும்: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு!

Update: 2022-06-08 05:50 GMT

தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவை நாம் விரைவில் உருவாக்க முடியும் என்று ஆரோவில்லில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழகப்பகுதியாவ ஆரோவில்லில் புதுச்சேரி சரக்குகள் -சேவை வரி, மத்திய கலால் வரி இயக்குனரகம் மற்றும் ஆரோவில் நிர்வாகம் இணைந்து நடத்திய ஒரு நாள் தூய்மை பணி மற்றும் மரக்கன்று நடும் விழா நேற்று (ஜூன் 7) நடைபெற்றது.

இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதனை தொடர்ந்து விழா மேடையில் அவர் பேசியதாவது: பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய தூய்மை இந்தியா திட்டத்தால் நாட்டில் தொற்றுநோய் சிகிச்சைக்காக ஆண்டுதோறும் செலவு செய்யக்கூடிய அதிகப்படியான பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. தூய்மை என்பது சுற்றுப்புறத்தை ஏற்படுத்துதல், கழிப்பறைகளை கட்டுதல், திறந்தவெளி கழிப்பறை இல்லாத பகுதிகளை உருவாக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி கவனம் செலுத்தினார். அதன்படி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்றாகும். இந்த மாபெரும் சாதனை படைத்த புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.


தூய்மை மற்றும் பசுமை செயல்பாடுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அரவிந்தர் குறிப்பிட்டதைப் போன்று நமக்கு விடுதலை மட்டுமல்ல ஆன்ம விடுதலையும் அவசியம். அப்போதுதான் மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கும்போது உற்சாக கிடைக்கும்.

மேலும், பிரதமர் மோடி அறிவித்த ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்கள் வாயிலாக பல சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தி சுதந்திர இந்தியாவின் பெருமையை உணருகிறோம். எனவே இத்திட்டத்தின் மூலமாக தூய்மையான, பசுமையான இந்தியாவை நாம் விரைவில் உருவாக்க முடியும். இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Source: Daily Thanthi

Image Courtesy: Twitter

Tags:    

Similar News