வெப்ப அலைகள் இந்தியாவை தாக்கும் அபாயம்: மத்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை?

இந்தியாவில் வீச இருக்கும் வெப்ப அலைகள் குறித்து மாநிலங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு ஆலோசனை.

Update: 2023-03-01 23:56 GMT

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாகவே இருந்து வருகிறது. இதனால் வெப்ப நோய்கள் தாக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக வெப்ப தளர்ச்சி, மயக்கம், சிறுநீர் கடுப்பு, வயிற்றுப்போக்கு, அம்மை நோய் போன்ற நோய்கள் ஏற்படுவது விளக்கமாக இருக்கிறது. இப்படிப்பட்ட வெப்ப நோய் தொடர்பாக மாநிலங்கள் உஷார்ப்படுத்தும் விதத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிக்கையை தற்போது அனுப்பி இருக்கிறது.


குறிப்பாக மத்திய அரசு அனுப்பிய அறிக்கையில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஏற்படுகின்ற நோய்களை எதிர்கொள்வதற்கும் வெப்ப நோய்களால் தாக்கப்பட்டு வருவோருக்கு சிகிச்சை அளிக்க சுகாதார மையங்களும் ஆஸ்பத்திரிகளும் தயாராக இருக்க வேண்டும் என்றும், அதற்கு ஏற்ற வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் இருக்குமாறு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என்றும் தற்போது கூறப்பட்டு இருக்கிறது. வெப்ப நோய்கள் மரணங்கள் தொடர்பான தரவுகளை அவ்வப்பொழுது துல்லியமாக வைத்திருப்பதை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டு இருக்கிறது.


மாநிலங்களுடன் மத்திய சுகந்திர அமைச்சகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் பகிர்ந்து கொள்கின்ற வெப்ப எச்சரிக்கை மற்றும் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல்களை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க தீவிரமான ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்களை பார்த்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை தொடர்பான காலநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியம் பற்றிய தேசிய திட்டங்களின் கீழ் உருவாக்கப்படுகிற விழிப்புணர்வு பிரசுரங்கள் மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Hindu News

Tags:    

Similar News