கனமழை.. காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை.. காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை
காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புரெவி புயல் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு இடையில் பள்ளிகளை திறந்துள்ளது. தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புதுச்சேரியின் காரைக்காலில் கனமழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக காரைக்காலில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மடடுமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது மழை காரணமாக அவர்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை விட்டதும் மாணவர்கள் துள்ளிக்குதித்து ஓடினர்.
மேலும், சிலர் மழையில் நனைந்தபடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே நாளை பள்ளிகள் திறக்கப்படுமா என்பது பற்றிய அறிவிப்புகளை அரசு கூறவில்லை