புதுச்சேரியில் அடுத்து வருகின்ற 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
புதுச்சேரியில் மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதுவரை மொத்தம் 87 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
புதுச்சேரியில் மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதுவரை மொத்தம் 87 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளம், அணைகள் என நிரம்பி வழிகிறது. பல இடங்களில் அணை பாதுகாப்பை கருதி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் அடுத்த வருகின்ற 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் ஏற்படுகின்ற அசம்பாவிதங்களை சமாளிக்கின்ற வகையில் மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாக புதுச்சேரி ஆட்சியர் பூர்வா கார்க் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறும்போது, பொதுக்களுக்கு எந்த நேரத்திலும் அவசர நிலை தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளார்.
Source: Maalaimalar
Image Courtesy: Skymet Weather