நாட்டின் வளர்ச்சிக்கு அனைவருக்கும் உயர் கல்வி அவசியம்: பல்கலைக் கழக வேந்தர் கருத்து!

நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய அனைவருக்கும் உயர் கல்வி அவசியம் என வேலூர் பல்கலைக்கழக வேந்தர் கருத்து.

Update: 2023-02-18 02:11 GMT

நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய அனைவருக்கும் உயர் கல்வி அவசியம் என்று வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார். ‘அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள்’ மற்றும் ‘மக்கள் நலத்திட்டங்கள்’ குறித்த 5 நாட்கள் நடைபெறும் புகைப்பட கண்காட்சி வேலூரில் இன்று தொடங்கியது. இதனை வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தொடக்கி வைத்துப் பேசினார். இந்த நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள் கோடிக் கணக்கானோர் உள்ளனர், அவர்கள் அனைவரின் விபரம் நமக்கு தெரியாது. ஆனால் அவர்கள் மூலம்தான் நம் நாடு விடுதலை அடைந்தது.


இது போன்ற கண்காட்சிகள் மூலம் நமது ஊரில் இருந்து போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை நாம் அறிந்து கொள்ளலாம் என்று கூறினர். 2022-ஆம் ஆண்டில் நாம் உலகின் வலுவான பொருளாதார நாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ளோம். பொருளாதார வளர்ச்சியில் நாம் வளர்ந்து கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 200 ஆண்டுகள் நம்மை ஆட்சி செய்த நாடுகளை பின்னுக்கு தள்ளி நாம் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளோம்.


நாட்டின் வளர்ச்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமானால் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். அதிலும் உயர் கல்வி அனைவருக்கும் கிடைக்க நாம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய மத்திய மக்கள் தொடர்பக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குனர் காமராஜ், மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது. அதனை தகுதியான நபர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார். 

Input & Image courtesy: News

Tags:    

Similar News