புதுச்சேரி மண்ணாடிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி, பி.சி.ஏ., பட்டதாரி ஆவார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், விவசாயம் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தன்னுடைய வேலையை விட்டு, விட்டு பூர்வீக விவசாய நிலத்தில் டிராகன் பழ சாகுபடி செய்தார். அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பயிரிடப்பட்ட டிராகன் பழ செடிகள், தற்போது அறுவடையை தொடங்கியுள்ளது.
இங்கு அறுவடை செய்யப்பட்ட டிராகன் பழங்கள் பழ கடைகளில் கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த டிராகன் பழசாகுபடி என்பது ஒருமுறை முதலீடு செய்தால் போதும், 20 ஆண்டுகளுக்கு மகசூல் தரும் பயிராக டிராகன் அமைகிறது. இதனால் விவசாயிகளுக்கு எவ்வித நஷ்டமும் ஏற்படுவதில்லை, அதிகமான லாபம் பெறலாம் என்று விவசாயி செல்வமணி கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Maalaimalar