'இஸ்லாமியர்களின் வாக்குகளை வாங்கி விட்டு கிள்ளுக்கீரையாக நினைக்கிறார்கள்' - மனம் வெறுத்து போய் ராஜினாமா செய்த தி.மு.க இஸ்லாமிய நிர்வாகி

'இஸ்லாமியர்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுவிட்டு அவர்களை கிள்ளுக்கீரையாக கையாள்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்' என மாநில இளைஞரணி அமைப்பாளர் பதவியை முகமது யூனிஸ் தி.மு.க'வில் இருந்து ராஜினாமா செய்துள்ளார், இந்த விவகாரம் புதுச்சேரி தி.மு.க'வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-04 13:44 GMT

'இஸ்லாமியர்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுவிட்டு அவர்களை கிள்ளுக்கீரையாக கையாள்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்' என மாநில இளைஞரணி அமைப்பாளர் பதவியை முகமது யூனிஸ் தி.மு.க'வில் இருந்து ராஜினாமா செய்துள்ளார், இந்த விவகாரம் புதுச்சேரி தி.மு.க'வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது புதுச்சேரியில் தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கிறது, இந்நிலையில் அந்த கட்சியின் இளைஞரணி அமைப்பாளராக முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தெரிவித்ததுடன் கட்சியின் மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எல்.ஏ சிவா தன்னையும் இஸ்லாமியர்களின் புறக்கணிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.


ரம்ஜான் தினத்தை முன்னிட்டு சுல்தான் பேட்டையில் பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்றது சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அந்த தொழுகையில் கலந்து கொண்டனர் தொழுகை முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனிஸ் கூறியதாவது, 'கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா நேரத்தில் கூட வில்லியனூர் தொகுதி முழுவதும் அனைத்து விதமான உதவிகளையும் செய்து இருக்கிறேன், அதனால் எனது முழு பொருளாதாரத்தையும் இழந்திருக்கிறேன். ஆனால் மாநில அமைப்பாளர் ஆனால் சிவா கேட்டுக் கொண்டதற்காக தொகுதியை விட்டுக் கொடுத்தேன்.

அவருடைய வெற்றிக்காக அரும்பாடுபட்டு இன்று வெற்றி பெற்ற பிறகு ஓரங்கட்டும் விதமாக இளைஞரணி அமைப்பாளர் என்ற மரியாதையை கூட கொடுக்காமல் எங்களை அவமதிக்கும் விதமாக நடத்துகிறார். நான் தி.மு.க'வை சேர்ந்தவன் அதனால் தன்மானமும், சுயமரியாதையும் அதிகம் உள்ளவன் அதற்கு இழுக்கு வரும் போது எவ்வளவு தாக்குப்பிடித்தாலும் எங்களை கேவலப்படுத்துகிறார்கள் எந்த கூட்டத்திலும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை' என பொங்கினார்.

மேலும் பேசிய அவர், 'இஸ்லாமியர்கள் வாக்குகளால் வெற்றி பெற்ற வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ சிவா இஸ்லாமியர்களுக்கும் எதிராக நடந்து கொள்கிறார் பள்ளிவாசலை திறக்காமல் பள்ளிவாசல் உள்ளே அனுமதிக்காமல் தெருவில் வைத்து இப்தார் நோன்பு திறப்பு கொண்டாடி அனுப்பி இருக்கிறார்கள் என்பதுதான் இந்த அவமானம் நிச்சயம் நாங்கள் இருந்தால் இருந்திருக்காது. இஸ்லாமியர்களின் வாக்குகளை வாங்கி விட்டு அவர்களை கிள்ளுக்கீரையாக கையாள்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் கனத்த இதயத்துடன் தி.மு.க'விலிருந்து வெளியேறுகிறேன்' என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - Junior Vikatan

Similar News