பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வயதான தம்பதியிடம் பணம், நகை மோசடி !

உதவுவது போன்று நடித்து வயதான தம்பதியிடம் பணம், நகை மோசடி செய்த ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-10-13 12:19 GMT

உதவுவது போன்று நடித்து வயதான தம்பதியிடம் பணம், நகை மோசடி செய்த ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி வினோபா நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் புத்துப்பட்டான். இவரது மனைவி ராகினி 80. இவர் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இரண்டு பேரும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆவார். இவர்களது மகன், மகள் பிரான்சில் இருந்து வரும் நிலையில் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், தங்களது தேவைகளுக்காக அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் மற்றும் செல்வம், வேலு ஆகியோரை வயதான தம்பதிகள் அழைப்பது உண்டு. அதே போன்று அவர்களுடன் சேர்ந்து புத்துப்பட்டான் அடிக்கடி வங்கியில் சென்று பணம் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புத்துப்பட்டான், ராகிணி ஆகியோர் தங்களது வங்கியில் உள்ள பணம் இருப்பு பற்றி சரிபார்த்தபோது, பணம் குறைவாக இருப்பது தெரியவந்தது. மேலும், புத்துப்பட்டான் அணிந்திருந்த 10 சவரன் நகைகளும் திருடு போயிருந்தது. அது மட்டுமின்றி பிரான்சில் உள்ள அவர்களது மகள் வீடு விற்கப்பட்டதில் அதில் 5 லட்சம் வரை கணக்கில் காட்டவில்லை என கூறப்படுகிறது. இது பற்றி கோரிமேடு காவல் நிலையத்தில் புத்துப்பட்டான் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் ரமேஷ், செல்வம், வேலு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Source: Daily Thanthi

Image Courtesy:Mint


Tags:    

Similar News