புதுச்சேரியில் விரைவில் அரசு மருத்துவக் கல்லூரி: முதலமைச்சர் உறுதி!

காரைக்காலில் விரைவில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்து இருக்கிறார்.

Update: 2023-03-23 01:34 GMT

பட்ஜெட் தாக்கலின் போது புதுச்சேரியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளை புதுச்சேரி அரசாங்கம் நிச்சயம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கேள்வி நேரத்தின் போது அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு முதலமைச்சராக சாமி அவர்கள் தன்னுடைய பதில் உரையில், இது பற்றி கூறுகையில் மருத்துவ வசதிகள் மற்ற அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை கொண்டு சென்று காலாப்பட்டு திருக்கானூர், திருபுனை, பாகூர் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சென்டர்களை உள்ளன.


புதிதாக அரசு பொது மருத்துவமனை அமைக்க 300 கோடி தேவைப்படுகிறது. அவற்றுக்காக தற்பொழுது மத்திய அரசை அணுகுகிறோம் விரைவில் கொண்டு வரப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். மேலும் புதுச்சேரியில் ஏற்கனவே உள்ள அரசு மருத்துவமனை மருத்துவமனை இருக்கிறதா ஆனால் காரைக்காலில் சரியான சிகிச்சை கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதாக தகவல் கூறப்படுகிறது. காரைக்காலில் மக்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜிம்பர் மருத்துவமனைகளை துவங்கப்பட்டிருக்கிறது. விரைவில் அது செயல்பாட்டிற்கு வரவுள்ளது நம் அரசு பொது மருத்துவமனையும் இதன் மூலம் மேம்பாடு அடைய உள்ளது, இதற்கான நிதியும் தற்போது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பணிகள் துவங்கப்பட இருக்கிறது.


மேலும் காரைக்கால் திருநல்லூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி துவங்க நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் அரசு மருத்துவமனை மருத்துவமனை புதிதாக எந்த பகுதிகளில் ஆரம்பிக்கலாம் என்பது குறித்த ஆலோசனை தொடர்ந்து முடிவு செய்யப்படும் என்றும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேர பணிகளில் டாக்டர்களை நியமிக்க இருப்பதாகவும் முதல்வர் தரப்பில் கூறப்பட்டது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News