திருநள்ளாறு: நில மோசடி செய்த சார்பதிவாளர் மீது வழக்குப்பதிவு !

காரைக்கால் அருகே உள்ள நெடுங்காடு பகுதியை சேர்ந்தவர் குமார் ஆனந்த் இவர் பிரான்ஸில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலத்தை நாகை மாவட்டம், பொயை£ர் சிவன் கோயில் தெருவை சேர்ந்த தேவராஜ் 73, குமார் ஆனந்த் இறந்து விட்டதாக போலியான இறப்பு சான்றிதழ் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2021-10-20 10:55 GMT

இது பற்றி கேள்விப்பட்ட குமார் ஆனந்தின் நிலத்தை பராமரித்து வரும் குணசேகரன் என்பவர் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தேவராஜ், செருமா விளங்கை கிராமத்தை சேர்ந்த இளங்கோவன், நெடுங்காடு வடமாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் 41, காரைக்காலை சேர்ந்த செய்யது முகமது முகைதீன் அப்துல் காதர் 45, ஆகியோர் போலியான ஆவணங்கள் தயார் செய்து நிலமோசடி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தேவராஜ், பாஸ்கரன், செய்யது முகைதீன் அப்துல் காதர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், நில மோசடியில் கைது செய்யப்பட்ட 3 பேர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நில மோசடிக்கு உடந்தையாக இருந்த திருநள்ளாறு சார்பதிவாளர் ஜெயக்குமார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News