புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடலாம்.. முதலமைச்சர் நாராயணசாமி.!

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடலாம்.. முதலமைச்சர் நாராயணசாமி.!

Update: 2020-12-22 17:47 GMT

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கம் போல எவ்வித தடையும் இன்றி நடைபெறும் என்றார்.

மேலும், புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடா தடை இல்லை என்றும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கொண்டாடலாம் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரனோ தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று மற்ற மாநிலங்களில் அந்தந்த சூழ்நிலைகள் பொறுத்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Similar News