புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது ? புதிய தகவல் வெளியீடு !

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் 38 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலுக்கு பின்னர் மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவே இல்லை.

Update: 2021-09-19 02:38 GMT

புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் 38 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலுக்கு பின்னர் மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவே இல்லை.

இதனிடையே உள்ளாட்சித் தேர்தலை அக்டோபர் மாத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் தேர்தல் ஆணையம் துரிதமாக செயல்பட்டு வருகிறது.

தற்போது புதுச்சேரியில் மாநிலங்களவை பதவிக்கான தேர்தல் நடைபெற்ற முடிந்த பின்னர் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News