புதுச்சேரியில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கின்ற வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-17 04:01 GMT

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கின்ற வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் கோயில் திருவிழாக்கள், மத விழாக்கள் நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி தினமும் இரவு நேர ஊரடங்கு (இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) சமூக மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட மக்கள் கூடுவதற்கு தடை நீடிக்கும். இரவு நேரங் ஊரடங்கின்போது தவிர மற்ற நேரங்களில் பூங்கா மற்றும் கடற்கரையை திறக்கலாம். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். துக்க நிகழ்ச்சிகளில் 20 பேர் வரை கலந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Source:Maalaimalar

Image Courtesy:NDTV


Tags:    

Similar News