அழிந்து வரும் கடற்கரையை பாதுகாப்போம்.. களத்தில் இறங்கிய புதுவை ஆளுநர் தமிழிசை..

கடலில் கலக்கப்படும் கழிவுகள் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வருவதாக கவர்னர் தமிழிசை கூறினார்.

Update: 2023-05-23 01:00 GMT

இந்தியா தற்பொழுது ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை வகித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இது தொடர்பான பிரச்சாரங்களும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட வருகிறது. அந்த வகையில் தூய்மை பணி என்ற பொறுப்பின் கீழே நாட்டின் தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியா உட்பட்ட 20 நாடுகளில் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள கடற்கரையில் நேற்று தொடங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் புதுவை ஆளுநர் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.


'கடற்கரையை சுத்தப்படுத்துவோம்' என்ற உறுதி மொழியுடன் இளைஞர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். முன்பெல்லாம் நிலத்திலிருந்து கழிவுகளை அப்புறப்படுத்த கடலில் கொட்டுவது வழக்கமாக இருந்தது. கடலில் கூட்டப்படும் கழிவுகளை மீன்கள் தங்களுடைய உணவுகளாக எடுத்துக் கொள்கிறது. பிறகு அந்த மீன்களை நாம் பிடித்து சாப்பிடும் பொழுது அவை நமக்கே நஞ்சாக அமைந்து விடுகிறது இதுபோன்ற ஆபத்துக்களை குறைக்க பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


குறிப்பாக பிரதமர் மோடி அவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இத்தகைய ஒரு சிறப்பான செயல்களை முன்னெடுத்து உங்களுக்கு சுதந்திர இந்தியா வேண்டுமா? அல்லது தூய்மை இந்தியா வேண்டுமா? என்ற ஒரு கேள்விக்கு சுதந்திர இந்தியா தான் முதலில் வேண்டும். ஏனென்றால் சுதந்திர இந்தியா தான் பிறகு தூய்மையான சுதந்திர இந்தியாவாக உருவெடுக்கும் என்று காந்தியடிகள் பிரச்சாரத்திற்கு இணங்கு இந்த ஒரு திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது என கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News