மருத்துவம் படிப்பிற்கான இறுதி கட்ட கலந்தாய்வு எப்போது: சென்டாக் புதிய தகவல்!

Update: 2022-03-30 02:36 GMT
மருத்துவம் படிப்பிற்கான இறுதி கட்ட கலந்தாய்வு எப்போது: சென்டாக் புதிய தகவல்!

புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான இறுதி கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 2ம் தேதி நடைபெறுவதாக சென்டாக் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்டாக் கன்வீனர் ருத்ர கவுடு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கடந்த 28ம் தேதி நடைபெறுதாக இருந்த இறுதி கட்ட கலந்தாய்வு திடீரென்று ரத்து செய்ய நேர்ந்தது.

எனவே அந்த கலந்தாய்வு ஏப்ரல் 2ம் தேதி நடைபெற உள்ளது. இன்று காலை வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடும், அரசு ஒதுக்கீடும் மாணவர்களுக்கும் மற்றும் சிறுபான்மையின ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News