இலவச துணிக்கு பதில் வங்கிக்கணக்கில் ரொக்கம்: புதுச்சேரி அரசு அதிரடி!

Update: 2022-01-13 02:43 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் இலவச துணி வழங்கப்பட்டு வருவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டு துணிக்கு பதில் ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று புதுச்சேரி அமைச்சர் தேனி ஜெயக்குமார் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் ஆளுநராக இருந்த கிரண்பேடி இலவச துணி வழங்குவதற்கு பதில் ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்துமாறு இதற்கு முன் இருந்த காங்கிரஸ் அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனை தற்போதைய அரசும் பின்பற்றுகிறது. அதன்படி தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் இலவச துணிக்கு பதில் நேரடியாக வங்கிக்கணக்கில் பணம் செலுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் தேனி ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவுரைப்படி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் உத்தரவின்பேரில் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஏழைகளுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.500 செலுத்தப்படும். 2க்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வீதம் பணம் செலுத்தப்படும். இதற்காக ரூ.12 கோடியே 13 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News