புதுச்சேரியில் கனமழை: பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் குழு ஆய்வு!
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகர் மற்றும் கிராமப்புறங்களில் அமைச்சர்கள் அதிரடியான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.;
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகர் மற்றும் கிராமப்புறங்களில் அமைச்சர்கள் அதிரடியான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி மண்ணாடிப்பட்டு தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் நமச்சிவாயம் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மழை நீரால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் அமைச்சர்களிடம் தெரிவித்தனர். உரிய நஷ்ட ஈடு கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.தொடர்ந்து புதுச்சேரியில் மழை பெய்து வருவதால், மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட செட்டிப்பட்டு, மணலிப்பட்டு, திருக்கனூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் தாழ்வாக உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தொகுதி எம்.எல்.ஏ.வும் உள்துறை அமைச்சருமான நமச்சிவாயம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், செட்டிப்பட்டு படுகை அணை, கூனிச்சம்பட்டு படுகை அணைகளை ஆய்வு செய்தனர்.
Source, Image Courtesy: Daily Thanthi