அரசியலை தாண்டி ஒவ்வொரு வீட்டுக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் எடுத்து செல்ல வேண்டும்! - ஆளுநர் தமிழிசை அதிரடி!

வீடு, வீடா தடுப்பூசி போடும் திட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு வீட்டுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Update: 2021-09-21 07:02 GMT

இந்நிலையில், புதுச்சேரி, கருவடிக்குப்பம் மற்றும் திருவள்ளூவர் நகர் பகுதிகளில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் நோயாளிகளின் குறைகளை சரிசெய்வதற்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், ஸ்கேன் வசதி, மற்றும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முயற்சிகளை எடுக்கும்.

மேலும், புதிய முயற்சியாக வீடு, வீடாக கணக்கெடுப்பு நடத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் தங்களது பகுதியில் தடுப்பூசி முகாம்களை முன்னெடுத்து செல்ல வேண்டும். அனைவரும் கட்சி எல்லைகளை கடந்து எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் உள்ள அனைவருக்கும் 10 நாட்களில் தடுப்பூசி போடுவதற்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Dailythathi

Tags:    

Similar News