புதுச்சேரி: மழைக்கால பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை!
புதுச்சேரியில் தொடர் கனமழை காரணமாக அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை.
புதுச்சேரியில் மங்களம் தொகுதிகளில் மழைக்கால பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார் வில்லியனூர் பருவமழை சேதங்கள் இருபடாமல் இருக்க மங்களம் தொகுதியில் உள்ள முக்கிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முக்கிய பணிகளாக மங்களம் தொகுதிக்குட்பட்ட வடக்கு செட்டி வாய்க்கால் கீழ் சாத்தமங்கலம், கீழூர், மங்கலம் ஆகிய பகுதிகளில் ஏறி மற்றும் வாய்க்காலில் தூர்வாருவதற்கான பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
திருக்காஞ்சி, பெருங்களூர், கீழூர் பகுதியில் உள்ள L வடிவ மற்றும் U வடிவ வாய்க்கால்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் போர்க்கள அடிப்படையில் நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் உத்தரவிட்டு இருக்கிறார்.
மேலும் ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். பருவ மழை தீவிரம் அடைவதற்கு முன்பு அனைத்து பணிகளையும் முடிக்கும் மாறும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் பருவமழை காரணமாக மக்கள் பாதிக்கப்படாத வகையில் பணிகளை விரைந்து முடிவெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:Thanthi News