2023 ஜனவரி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் - அதிரடி காட்டும் பா.ஜ.க கூட்டணி புதுச்சேரி அரசு! ஏக்கத்துடன் பார்க்கும் தமிழக குடும்பங்கள்!

ஜனவரி 2023 முதல் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

Update: 2022-12-31 02:14 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 470 மதிப்புள்ள பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதற்காக புதுச்சேரி அரசாங்கம் சார்பில் ரூபாய் 67,000 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. முதலமைச்சர் ரங்கசாமி அவர்களின் தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் கலந்துரையாடிய பொழுது, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அரசின் எந்த உதவியும் வராத குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தோம்.


அதை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்க இருக்கிறோம் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் ஜனவரி முதல் வழங்கப்படும் என்றும், பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்றும், உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கையை புதுச்சேரி அரசு தற்போது ஏற்றுக்கொண்டு இருக்கிறது. பால் கொள்முதல் விலை முப்பத்தி நான்கில் இருந்து 37 ரூபாயாக உயர்த்துகிறது. இது இன்று முதல் அமலுக்கு வரும் என்று அவர் கூறுகிறார்.


470 மதிப்புள்ள பொங்கல் பண்டிகை முன்னிட்டு பத்து விதமான பரிசுப்பொருட்களை புதுவை அரசாங்கம் அறிவித்திருப்பது ஒட்டி அரசுக்கு 67 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்ட இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். மேலும் அரசு இந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு நிதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக விவசாயிகளுக்கும், மக்களுக்கும் நிவாரணங்கள் பல வழங்கி உள்ளதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.

Input & Image courtesy: Vikatan

Tags:    

Similar News