புதுச்சேரி: நமோ ஹாக்கி போட்டி இந்தியன் வங்கி அணி சாம்பியன்!

நமோ ஹாக்கி போட்டியில் இந்தியன் வங்கி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2022-12-12 13:58 GMT

புதுச்சேரியில் மாநில பா.ஜ.க மற்றும் லே பொது புதுச்சேரி ஹாக்கி அமைப்பு சார்பில் நமோ ஹாக்கி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தத. லாஸ்பேட்டை உள் அரங்கில் 5 பேர் கொண்ட நமோ ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒன்பதாம் தேதி முதல் 11ம் தேதி வரை நமோ ஹாக்கி போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


இதில் நேற்று காலை அரை இறுதி போட்டியும் அதில் வெற்றி பெற்ற அணிக்கு மாலையில் இறுதி போட்டியில் நடைபெற்றது. இறுதி போட்டியில் சென்னை இந்தியன் அணி, ஜி.எஸ்.டி மற்றும் கஸ்டம்ஸ் அணிகள் மோதி கலந்து கொண்டனர். இதில் இந்திய வங்கி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்று இருக்கிறது.


இரண்டாம் இடத்தை GST அணியும், மூன்றாவதாக இடத்தை எஸ்.ஆர்.எம் அணியும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுச்சேரி சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர் நமச்சிவாய மற்றும் அசோக் பாபு எம்.எல்.ஏ, புதுச்சேரி பா.ஜ க மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசு கோப்பைகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் லே ஆக்கி சங்க சேர்மன் லட்சுமி நாராயணன், தலைவர் செந்தில், பொதுச்செயலாளர் அன்பழகன், துணை தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Input & Image courtesy: Thanthi

Tags:    

Similar News