லாஸ்பேட்டை அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட 'நமோ ஹாக்கி' போட்டிகள்!

புதுச்சேரியில் லாஸ்பேட்டை உள் அரங்கில் நடைபெற்ற நமோ ஹாக்கி போட்டிகள்.

Update: 2022-12-11 13:00 GMT

புதுச்சேரி மாநில பா.ஜ.க மற்றும் லே புதுச்சேரி ஹாக்கி அமைப்பு இணைந்து நடத்தும் நமோ ஹாக்கி போட்டி நேற்று தொடங்கியது. லாஸ்பேட்டை உள்ள அரங்கில் நமோ ஹாக்கி போட்டிகள் மூன்று நாள் நடக்க இருக்கிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பா.ஜ.க மாநில தலைவர் சாமி நாதன் தலைமை தாங்கினார்.


மேலும் லே ஹாக்கி குழு சேர்மன் லட்சுமி நாராயணன் வரவேற்று சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் விழாவில் அமைச்சர் சாய் சரவணக்குமார் போட்டியை தொடங்கி வைத்து வீரர்களுக்கு உற்சாகமளித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், வி.பி ராமலிங்கம், வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பு நிகழ்த்தினார்கள். போட்டிகளின் நிறைவு விழா நாளை மாலை 3 மணிக்கு நடக்கிறது.


விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாய மற்றும் பா.ஜ.கவின் தமிழ்நாடு மாநில செயலாளர் S.G.சூர்யா அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார். போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூபாய் 50,000, இரண்டாம் பரிசாக முப்பதாயிரம், மூன்றாம் பரிசாக இருபதாயிரமும், நான்காம் பரிசாக பத்தாயிரம் வழங்கப்பட இருக்கிறது. இந்த போட்டியில் ஹாக்கி சங்கத் தலைவர் செந்தில் செயலாளர் அன்பழகன், துணைத்தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:



Tags:    

Similar News