ரங்கசாமி ஆட்சியை விமர்சனம் செய்ய நாராயணசாமிக்கு தகுதி இல்லை: அன்பழகன் கண்டனம்!

Update: 2022-08-02 11:48 GMT

புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தின் இருண்ட ஆட்சி கடந்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாகும். இந்த இருண்ட ஆட்சிக்கு தலைமை ஏற்றிருந்த நாராயணசாமி தேசிய ஜனநாயக முன்னணி அரசை அடிமை ஆட்சி என்று சொல்வது கண்டனத்திற்குரியது.

வேண்டும் என்று கட்சி தலைமையை திருப்திப்படுத்துவதற்கும், விளம்பர மோகத்துக்காக மத்திய அரசுடன் மோதல் போக்கை மட்டுமே கடைபிடித்து வந்தார். மேலும், மக்கள் விரட்டியடிப்பார்கள் என்று தெரிந்துகொண்ட நாராயணசாமி தேர்தலில் போட்டியிடாமல் ஒளிந்து கொண்டார். எனவே அவர் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெறும் நல்லாட்சி பற்றி குறைகூறுவதற்கு தார்மீக உரிமை கிடையாது.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய சாவர்க்கர் உள்ளிட்டோரை பற்றி குறைத்துப் பேசுவதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று நாராயணசாமி உணர்ந்து செயல்பட வேண்டும். மத்திய அரசுடனும், ஆளுநருடனும் இணக்கமான் சூழ்நிலையை ஏற்படுத்தி நல்லாட்சி நடத்தி வருகிறார் ரங்கசாமி. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News