புதுச்சேரி சேர்ந்த செவிலியர் இருவருக்கு நைட்டிங்கேல் விருது - திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார்!

புதுச்சேரியை சேர்ந்த இரண்டு செவிலியர்கள் தற்பொழுது ஜனாதிபதி இடம் நைட்டிங்கேல் விருதை பெற்று இருக்கிறார்கள்.

Update: 2022-11-09 06:25 GMT

மே 12, 1820ல், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். மே 12ம் தேதி, அவருடைய, 200வது பிறந்தநாள். அதை கௌரவிக்கும் விதமாக தான் உலக செவிலியர் தினம் அன்றைய தினத்தில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பல்வேறு நாடுகளில் சிறப்பாக கைவைசையும் செவிலியர்களுக்கு இவருடைய பெயரில் தனிப்பட்ட விருதுகளும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் செவிலியர் பணிகளில் ஈடுபடுவோர் ஆற்றிய சிறந்த சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்படுகிறது.


புதுடெல்லி, செவிலியர்கள் மற்றும் செவிலியர் பணிகளில் ஈடுபடுவோர் சமூகத்திற்கு ஆற்றிய சிறந்த சேவைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் 1973-ம் ஆண்டு தேசிய புளோரன்ஸ் நைட்டிங் கேல் விருதுகளை ஏற்படுத்தியது. சிறப்பாக சேவைகளை செய்யும் செவிலியர்களுக்கு இத்தாலியின் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் நினைவாக தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.


இதன்படி 2021 ஆண்டிற்கான விருது நேற்று வழங்கப்பட்டது நாடு முழுவதும் சுமார் 51 செவிலியர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த வருகை வழங்கி இருக்கிறார். இதில் தமிழகத்தில் மங்கம்மாள், எஸ்.செல்வி ஆகியோரும், புதுச்சேரியில் அங்காள ஈஸ்வரி, சரஸ்வதி ஆகிய இரண்டு பேரும் இந்த விருந்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் நேற்று இந்த விருதை பெற்றுக் கொண்டார்கள்.

Input & Image courtesy:Thanthi News

Tags:    

Similar News