புதுச்சேரியில் தேசிய இளைஞர் திருவிழா முன்னேற்பாடு: மத்திய அமைச்சர் நேரில் ஆய்வு!

புதுச்சேரியில் 7,500 பேர் கலந்து கொள்ளும் தேசிய இளைஞர் திருவிழா முன்னேற்பாடு பணிகளை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் நேரில் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின்போது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-01-06 03:41 GMT

புதுச்சேரியில் 7,500 பேர் கலந்து கொள்ளும் தேசிய இளைஞர் திருவிழா முன்னேற்பாடு பணிகளை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் நேரில் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின்போது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் இந்த ஆண்டிற்கான தேசிய இளைஞர் விழா ஜனவரி 12ம் தேதி தொடங்க உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்நிலையில், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை புரிந்தார். அப்போது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோருடன் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மத்திய அமைச்சருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விநாயகரை நினைவு பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy: Twiter

Tags:    

Similar News