புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி உறுதி.?

nda alliance pudhucherry

Update: 2021-03-09 05:01 GMT

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த அரசியல் திருப்பங்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியல் ரீதியாக மாற்றி மாற்றி பேசி வந்தனர்.

இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி தொடருமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.திடீரென கூட்டணியில் இருந்து பிரிந்து தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.




 


இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக, பாஜக கட்சிகள் ரங்கசாமியுடன் கூட்டணி குறித்து பேசுவதற்கு முற்பட்டது. ஆனால் ரங்கசாமி பிடி கொடுக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே நேரடியாக முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.




 


இதில் முதலமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனை ரங்கசாமி ஏற்றுக் கொண்ட நிலையில் மீதமுள்ள 13 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆனால் இது தொடர்பாக ரங்கசாமி வெளிப்படையாக எதையும் கூறவில்லை. விரைவில் பாஜக மேலிடம் அறிவிக்க வாய்ப்புள்ளது என புதுச்சேரி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Similar News