மருத்துவ மாணவர்களுக்கு அருமையான அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி அரசு..

Update: 2023-09-24 02:00 GMT

புதுச்சேரி அரசாங்கம் தற்பொழுது மருத்துவ மாணவர்களுக்கு அருமையான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது 10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மருத்துவ மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவையில் ‘சென்டாக்’ மூலம் நடைபெறும் மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக புதுவை அமைச்சரவையில் முன்னதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் புதுச்சேரி அமைச்சரவையில் இது தொடர்பாக ஆளுநர் அவர்களின் பரிந்துரையின் பெயரில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் நேற்று வழங்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசு இதற்கான ஒப்புதல்களை வழங்கி இருக்கிறது. இந்த நிலையில், 10 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள 22 மாணவர்களின் பெற்றோர்கள் கல்விக் கட்டனத்தை செலுத்தவதில் சிரமம் உள்ளதாக முதல்வர் ரங்கசாமியிடம் தெரிவித்தனர்.


இந்நிலையில் கல்லூரிகளில் படிப்பதற்கு இடம் கிடைத்தாலும் பல்வேறு ஏழை மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதில் சிரமங்கள் இருப்பதன் காரணமாக கல்வி உயர் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலருடன் இன்று முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டார். அதன் பெயரில் 10% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முழுமையாக அரசு ஈர்க்கும் என்று கூறப் பட்டிருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News