நிதி இருப்பதால்தான் மக்களுக்கு திட்டங்களை கொண்டு வருகிறோம்... புதுச்சேரி முதலமைச்சர் பேச்சு..

Update: 2023-09-25 01:16 GMT

புதுச்சேரி மாநிலம் கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 நிதியுதவி வழங்கும் திட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அது மட்டும் கிடையாது முதல் அமைச்சர் ரங்கசாமி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துகிறார்.


இது பற்றி முதலமைச்சர் குறிப்பிடும் பொழுது, பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால், முத்திரைத்தாள் செலவில் 50 சதவீதம் தள்ளுபடி என்ற திட்டத்தை முதிலில் தொடங்கினோம். சிலர் நிதி இருக்கிறதா? இல்லையா? எப்படி கொடுப்பார் என்று நினைக்கலாம், பேசலாம். அரசிடம் நிதி இருக்கிறதா என்பதை யோசித்து தான் நாங்கள் மக்களுக்கான நலத்திட்டங்களை தற்போது கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். எனவே நிதி பற்றி தாங்கள் கவலைப்பட தேவையில்லை.


புதுச்சேரி மாநிலத்தில் முதலில் 70 ஆயிரம் குடும்பத் தலைவிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கான நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது ஒவ்வொரு தொகுதியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு இந்த நிதி கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் உடனடியாக வர வேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணம். விரைவில் தகுதி உடையவர்களுக்கும் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News