மக்களே புதுச்சேரி போறீங்களா.. இது தெரியாம போகாதீங்க அப்புறம் அபராதம் தான்..

Update: 2023-10-03 03:01 GMT

புதுச்சேரியில் தற்பொழுது நாளுக்கு நாள் போக்குவரத்து துறை போலீஸ் சார்பில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிகமாக விபத்துக்கள் நடைபெறும் புதுச்சேரி பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடு தற்போது விதிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் கிடையாது சமீபத்தில் தான் புதுச்சேரியில் மத்திய சாலை விபத்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஆய்வின் முடிவில் பல்வேறு கட்டுப்பாடுகளை புதுச்சேரியில் விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.


ஏனெனில் பல்வேறு விபத்துக்கள் நடைபெறும் புதுச்சேரி பகுதிகளில் மக்கள் அதிகமாக வெளியூர்களிலிருந்து பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் உடமைகள் மற்றும் உயிரை பாதுகாக்கும் பொருட்டு போக்குவரத்து போலீசார் மற்றும் புதுச்சேரி மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக சாலை விதிகளில் மாற்றம் கட்டாயம் ஹெல்மெட், சீட் பெல்ட் போன்றவை பின்பற்றப்பட வேண்டும். அப்படி விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதமும் தற்போது வழங்க விதிக்கப்பட்டு வருகிறது.


இந்த ஒரு நிலையில் சாலையில் செல்ல வேண்டிய வேக கட்டுப்பாடு குறித்து தற்போது அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள வேகத்தில் தான் வாகனத்தை நீங்கள் ஒட்ட வேண்டும். மீறி வாகனத்தை புதுச்சேரியில் அதிக வேகத்தில் ஓட்டினால் தங்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. முக்கியமான சாலைகளில் 45 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் தங்கள் பயணிக்க கூடாது என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News