புதுச்சேரி: தூய்மை இந்தியாவை நோக்கிய பயணத்தில் அடி எடுத்து வைத்த மக்கள்..

Update: 2023-10-03 03:02 GMT

இந்தியாவில் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து தங்களுடைய பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு மக்களிடம் இருந்தும் மற்றும் அரசாங்கத்திடமிருந்து முழுமையான ஒத்துழைப்பு கிடைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்களின் தலைமையில் தூய்மை புதுச்சேரி இரண்டு வார நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இருக்கிறது.


குறிப்பாக புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இந்த ஒரு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அப்பொழுது இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அது மட்டும் கிடையாது. நிகழ்ச்சி தொடக்கத்தின் பொழுது மாரத்தான் போட்டியும் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு மற்றும் திருநங்கைகள் பிரிவு என்று மூன்று பிரிவுகளாக நடத்தப்படும் என்றும் அந்த மூன்று பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சராக சாமி அவர்கள் நேரடியாக பரிசுகளை வழங்குவார் என்றும் குறிப்பிடப்பட்டது.


இந்த போட்டியும் நேற்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மேலும் தூய்மையை சேவை இருவார நலப்பணித் திட்டத்தை தொடங்கி வைத்ததோடு மட்டும் கிடையாது அக்டோபர் ஒன்றாம் தேதி ஆன நேற்று தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மணி நேரம் உபகரணங்களை வழங்கி தூய்மை இயக்கத்தில் இணைந்தது புதுச்சேரி அரசு. இந்த  நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News