புதுச்சேரி விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்.. முதல்முறையாக உரக்கடை திறப்பு..
புதுச்சேரி அடுத்த சோரப்பட்டு என்ற கிராமத்தில் விவசாயிகள் பயன்பாட்டிற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தின் மூலம் சோரப்பட்டு விநாயகம் பட்டு வம்புபட்டு செல்லிப்பட்டு உள்ளிட்ட நான்கு கிராம விவசாயிகள் இங்கு மானிய விலையில் உழவு பணிக்கான இயந்திரங்கள் வழங்குதல், பயிர் கடன், மகளிர் குழுக்களுக்கான கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது. மேலும் அவர்களுக்காக தேவையான விவசாயி இடுப்பொருட்களையும் மலிவான வரியில் வழங்கி வருகிறார்கள்.. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் முதன்முறையாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாய உர விற்பனை நிலையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த உர விற்பனை நிலையத்தை சங்க தலைவர் சீதாராமன் திறந்து வைத்து விற்பனை துவங்கினார்.
நிகழ்ச்சியில் சங்கத் துணைத் தலைவர், சங்க இயக்குனர்கள், சங்க மேலாளர், ஊழியர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர். இங்கு அனைத்து இடுபொருட்களும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சுற்று கிராமப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Input & Image courtesy: News 18