தற்போது இருக்கும் நவீன காலத்தில் அனைவருமே டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறுவதன் காரணமாக திருட்டுகளும் அதிகமாக தற்பொழுது நடந்து வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் ரீதியான திருட்டுக்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதற்காக தனியாக சைபர் க்ரைம் போலீசார் இருந்து வருகிறார்கள் அவர்கள் மக்களிடம் அவ்வப்பொழுது விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பிரச்சாரங்களையும் விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்துகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவை சேர்ந்த போலீசார் இதுகுறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
அதன் ஒரு பகுதியாக காரைக்காலில் மாவட்ட கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தலைமையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன், இன்ஸ்பெக்டர்கள் லெனின்பாரதி, புருஷோத்தமன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆன்லைன் மோசடிகள், மொபைல் போன் மூலமாக தவறான தகவல்கள் பரப்புவது மற்றும் புகைப்படத்தில் உள்ள பெண்களின் முகத்தை தவறாக சித்தரித்து பணம் பறிக்க முயல்வது, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரி, கடைகள், முக்கிய வீதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் வழங்கினர்.
குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் இது பற்றி தங்களுடைய பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவர்களிடமும் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
Input & Image courtesy: News