புதுச்சேரி சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு தளமாக இருந்து வருகிறது. குறிப்பாக அங்கு இருக்கும் கடற்கரைக்கு பல்வேறு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில் புதுச்சேரி கடல் பகுதியில் குருசுக்குப்பம் முதல் காந்தி சிலையின் பின்புறம் வரை கடலோரத்தில் ஒரு கிலோமீட்டர் நீளம் 10 கிலோமீட்டர் அகலத்தில் கடல் நீர் நேற்று முன்தினம் சேற்று நிறமாக காணப்பட்டது அதில் குளோரின் நெடி வீசியது.
இதனால் கடற்கரை வந்த சுற்றுலா பயணிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்து இது பற்றி தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். மற்றொரு பகுதி நீல நிறமாக இருந்த கடல் நீரை வியப்பில் பார்த்தார்கள். மேலும் சிலர் செல்பி எடுத்து மகிழ்ந்தார்கள். இது குறித்து மீனவர்கள் கூறும் பொழுது, "ஆரோவில் பகுதியில் உள்ள குளம் குட்டையில் இருந்து வெளியேறும் நீர் செந்நிறத்தில் கடலில் வந்து கலக்கிறது.
அங்கிருந்து அந்த நீர் வடக்கு நோக்கித் கடலின் நீரோட்டத்தில் கலந்து விடுகிறது. இது மழைக்காலங்களில் சிறிது சிறிதாக தெரியும். ஆனால் தற்போது சற்று அடர்த்தியாக தெரிகிறது" என்று கூறினார்கள். இதை தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் நேற்று மாலை கடற்கரைக்கு வந்து கடல் நீர் மாதிரிகளை ஆய்வுக்கு சேகரித்தார். காலையில் செந்நிறமாக காட்சி அளித்த கடல் நீர் மாலையில் வழக்கம் போல நீல நிறத்திற்கு அதுவாகவே மாறியது.
Input & Image courtesy: News