புதுச்சேரியில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த நிறுவனத்தின் கிளை.. அமைச்சரை சந்தித்து ஆலோசனை..

Update: 2023-10-22 03:16 GMT

ஜெர்மனி நாட்டை சேர்ந்த பார்மா நிறுவனம் ஒன்று புதுச்சேரியில் அந்நிறுவனத்தை தொடங்குவது தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிரவி பார்மா நிறுவனம் அந்த நாட்டில் 15 ஆண்டுகளாக பிளாஸ்மா புரோட்டின்ஸ் தயாரித்து வருகிறது. இந்தியாவில் முதன்முறையாக அந்த நிறுவனத்தை துவங்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக புதுச்சேரியில் தனது நிறுவனத்தை துவங்க ஆர்வமாக உள்ளது.


இது குறித்த அந்த பார்மசி நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் புதுச்சேரியை சேர்ந்த முக்கிய அமைச்சர்களுடன் கலந்துரையாடல் நடத்தி இருக்கிறார்கள். இந்நிலையில் இந்நிறுவனத்தின் முதன்மை அதிகாரி மார்க், முதன்மை விஞ்ஞானி சதீஷ்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து பேசினர்.


அப்போது அசோக் பாபு MLA உடனிருந்தார். அப்போது புதுச்சேரி மாநிலத்தில் பிளாஸ்மா, புரோட்டின்ஸ் தயாரிப்பதற்கான நிறுவனத்தை துவங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் பிரவி பார்மா நிறுவனம் துவங்க தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளதாக உறுதியளித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News