பாக்கலியோ, கேட்கலியோ பத்து நாளாக லியோ, லியோ தான்.. ரைமிங்கில் பேசிய ஆளுநர் தமிழிசை..

Update: 2023-10-24 04:34 GMT

தமிழகத்தை பொறுத்த வரை கடந்த 10 நாட்களாக எங்கு பார்த்தாலும் லியோ, லியோ என்று போய்க்கொண்டு இருக்கிறது என தனக்குரிய நகைச்சுவை உணர்வில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கூறியிருக்கிறார். இது குறித்து மாநில செய்தியாளர்கள் சந்திப்பின் இது பற்றி கூறும் பொழுது, ஒரு பத்து நாட்களாக லியோ குறித்த பிரச்சினை தான் போய்க் கொண்டிருக்கிறது. பார்க்கலையோ, கேட்கலையோ, போடலையோ, சப்போர்ட் இல்லையோ, அனுமதி இல்லையோ, அப்படின்னு லியோ போய்க்கொண்டே இருக்கிறது. என்னை பொருத்தவரையில் ஒரு நிலையான வழிகாட்டும் நெறிமுறைகள் இருக்க வேண்டும்.


ஆனால் குறிப்பிட்டவைகளுக்கு மட்டும் வழிகாட்டும் நெறிமுறைகள் இருக்கக் கூடாது. ஒரு நிலையான வழிகாட்டும் நெறிமுறைகள் என்பது எந்த ஒரு நடிகர் நடித்தாலும், எந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் தயாரித்தாலும் அனுமதி வழங்க வேண்டும். இதை நான் எதற்காக சொல்கிறேன் என்றால், புதுச்சேரியில் லியோ காலை 7 மணிக்கு படம் வெளியிட மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்து விட்டார். ஆனாலும் சில பல அழுத்தங்கள் வந்ததும் காலை 7 மணி காட்சிகள் போட முடியவில்லை, காலை 9 மணிக்குள் தான் படத்தை வெளியிட முடிந்தது. அதுவும் சில நிமிடங்கள் தள்ளி போனது. அதாவது வேறு ஒரு மாநிலத்தில் பக்கத்து மாநிலத்தில் ஒரு அனுமதி கொடுத்தாலும் சில இடங்களில் கூட இங்கிருந்து கொண்டு வரும் அழுத்தம் கொடுத்ததால் 7 மணி காட்சிகளை போட முடியவில்லை.


லியோ திரைப்படத்திற்கு காலை நான்கு மணி காட்சிகளுக்கு அனுமதிக்குமாறு பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலையில் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதேபோல் காலை 9 மணி காட்சிகளுக்கு பதிலாக காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கேட்டனர். அதை தமிழக அரசு கேட்குமாறு நீதிபதி கூறி இருந்த நிலையில், அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது என்று கூறி இருக்கிறார். இப்படி தமிழகத்தில் கடந்த பற்கள் பத்து நாட்களாக லியோ படம் தான் ஓடுகிறது என்று நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News